» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் ரூ.303 கோடியாக உயர்வு: நிர்வாக இயக்குனர் பேட்டி
திங்கள் 28, அக்டோபர் 2024 7:09:44 PM (IST)
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் ரூ.303 கோடியாக உயர்ந்துள்ளது என வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சலீ எஸ் நாயர் தெரிவித்தார்.
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் இயக்குனர் குழு கூட்டம் தூத்துக்குடியில் நடந்தது. இந்த கூட்டத்தில் 2024-2025-ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான நிதிநிலை அறிக்கை முடிவுகள் இறுதி செய்யப்பட்டன. இதனை வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான சலீ எஸ்.நாயர் வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு 1921-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு ஒவ்வொரு ஆண்டும் லாபம் ஈட்டி வருகிறது. வங்கியின் நிகரமதிப்பு (Networth) ரூ.8,430 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ.7,384 கோடியாக இருந்தது.
இது ரூ.1046 கோடி உயர்ந்து 14.17 % வளர்ச்சி அடைந்துள்ளது. RAM (சில்லரை, விவசாயம், சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள்) 91% யிலிருந்து 92%யாக உயர்ந்துள்ளது. வங்கியானது இந்த அரையாண்டில் 15 புதிய கிளைகளை துவக்கியுள்ளது. வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஜிஎஸ்டி செலுத்தும் வசதியுடன் நேரலையில் உள்ளது.
வங்கி வளர்ச்சியின் சிறப்பம்சங்கள் (Year on Year)
1. செயல்பாட்டு லாபம் ₹365 கோடியில் இருந்து ₹465 கோடியாக உயர்ந்து, 27.40% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
2. நிகர லாபம் 10.58% அதிகரித்து ₹274 கோடியிலிருந்து ₹303 கோடியாக உயர்ந்துள்ளது.
3. NIM 4.10% 2 4.25% அதிகரித்துள்ளது. 15 bps ஆக அதிகரித்துள்ளது.
4. வட்டி அல்லாத வருமானம் ₹156 கோடியிலிருந்து ₹227 கோடியாக உயர்ந்துள்ளது, இது 45.51% அதிகரித்துள்ளது.
5. மொத்த NPA 1.70% இலிருந்து 1.37% ஆகக் குறைந்துள்ளது, 33 bps மேம்படுத்தப்பட்டுள்ளது.
6. நிகர NPA 0.99% இலிருந்து 0.46% ஆகக் குறைந்துள்ளது, 53 bps மேம்படுத்தப்பட்டுள்ளது.
7. PCR 41.96% இலிருந்து 66.40% ஆக அதிகரித்துள்ளது.
8. மொத்த கடன் தொகையில் SMA ஆனது 5.59% இலிருந்து 4.16% ஆக குறைந்துள்ளது, 143 bps குறைந்துள்ளது.
9. ROA 1.89% இலிருந்து 1.94% ஆக அதிகரித்துள்ளது.
10. CRAR % 26.04% 2 மேம்படுத்தப்பட்டுள்ளது. 29.59% ஆக அதிகரித்துள்ளது, 355 bps அதிகரித்துள்ளது.
11. பங்கின் புத்தக மதிப்பு ₹466 இல் இருந்து ₹532 ஆக அதிகரித்துள்ளது.
வைப்புத்தொகை ரூ.47,314 கோடியில் இருந்து ரூ.49,342 கோடியாக உயர்ந்துள்ளது. கடன் தொகை ரூ.37,778 கோடியிலிருந்து ரூ.42,533 கோடியாக உயர்ந்துள்ளது. இது 12.59% வளர்ச்சியை எட்டியுள்ளது. நிகர வட்டி வருமானம் ரூ.596 கோடியாக உள்ளது. (முந்தைய ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ.533 கோடியாக இருந்தது ) இது 11.89% வளர்ச்சியடைந்துள்ளது என்று தெரிவித்தார்.
பேட்டியின் போது செயல் இயக்குனர் வின்சென்ட், தலைமை நிதி ஆலோசகர் பிஏ கிருஷ்ணன், பொது மேலாளர்கள் அசோக் குமார், ரமேஷ், விஜயன், ஜெயராமன், சுந்தரேஷ் குமார், லட்சுமணன், உதவி பொது மேலாளர் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.