» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முறைகேடாக உள்ள குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்தலாம் : மேயர் தகவல்!

திங்கள் 28, அக்டோபர் 2024 11:31:47 AM (IST)



தூத்துக்குடி மாநகராட்சியில் முறைகேடாக உள்ள குடிநீர் இணைப்புகளுக்கு பணம் செலுத்தி முறைப்படுத்திக் கொள்ளலாம் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். ஆணையாளர் மதுபாலன் முன்னிலை வகித்தர். கூட்டத்தில் மேயர் பேசும் போது, "வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு போர்க்கால நடவடிக்கையில் அனைத்து பணிகளும் நடந்து வருகின்றன. மாநகராட்சியில்1 லட்சத்து 52 ஆயிரத்து 382 வீடுகள் உள்ளன. இதில் 90 ஆயிரத்து 736 குடிநீர் இணைப்புகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டு குடிநீர் இணைப்புக்கும் ரூ.10 ஆயிரம் வைப்புத் தொகை பெறப்பட்டு வருகிறது. 

மாநகர பகுதிகளில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகி வருகின்றன. இந்த குடியிருப்புகளில் ஒரு குடிநீர் இணைப்பு பெற்று அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் எடுத்து வருகின்றனர். இதனை சரி செய்யும் வகையில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் வைப்புத் தொகை பெறப்பட உள்ளது. மாநகராட்சியில் முறையாக அனுமதி பெறாமல் எடுக்கப்பட்டு உள்ள குடிநீர் இணைப்புகளுக்கு பணம் செலுத்தி முறைப்படுத்திக் கொள்ளலாம்.

மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் சுமார் 80 சதவீதம் பணிகள் முடிந்து உள்ளன.மற்ற பணிகள் விரைந்து முழுமையாக நிறைவேற்றப்படும். பல்வேறு பழமையான பூங்காக்கள் சீரமைக்கப்பட்டு உள்ளது. புதிய இடங்களில் நவீன தொழில்நுட்பத்துடன் பூங்காக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பெண்களுக்கென்று திறக்கப்பட்ட பூங்காவில் 3 நாட்களில் சுமார் 1500 பேர் வருகை தந்து உள்ளனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. இதே போன்று மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள பூங்காக்களை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பராமரித்துக் கொள்ளலாம், என்று கூறினார்.

கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் ராஜாராம், உதவி ஆணையர்கள் சுரேஷ்குமார், கல்யாணசுந்தரம், வெங்கட்ராமன், செயற்பொறியாளர் சரவன், நகரமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory