» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் சுதேசி கப்பல் தினம்: வ.உ.சி. சிலைக்கு இந்து முன்னணி மரியாதை!
புதன் 16, அக்டோபர் 2024 3:10:39 PM (IST)
தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார் சுதேசி கப்பல் விட்ட தினத்தை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார், 1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனத்தை துவக்கினார். இந்து முன்னணியின் கிளை அமைப்பான இந்து வியாபாரிகள் நலச்சங்கம் ஆண்டுதோறும் அக்டோபர் 16ஆம் தேதி வணிகர் தினமாக கொண்டாடி வருகிறது. இதையொட்டி இன்று தூத்துக்குடி துறைமுகத்தில் வ.உ.சி. சிலைக்கு இந்து முன்னணி மாநில துணைத்தலைவரும் இந்து வியாபாரிகள் நலச்சங்கத்தின் மாநில தலைவருமான வி.பி. ஜெயக்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இதில், இந்து முன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன், மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்து குமார், நெல்லை மாவட்ட தலைவர் சுரேஷ், இந்து வியாபாரிகள் சங்க நெல்லை மாவட்ட தலைவர் சங்கர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட துணைத் தலைவர்கள் பிஎம்ஸ் Sபாபு, ஆரியங்காவு, ஓம்சக்திமாரியப்பன், மாவட்ட செயலாளர்கள் மார்கெட்கணேசன், லெட்சுமிநாராயணன், வெங்கடசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் இளங்கோசெந்தில், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் ரெஜீஸ், தென்றல் நடராஜன் அருள்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.