» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கொரோனா ஊரடங்கின் போது இயக்கப்படாத ஆம்னி பஸ்களுக்கு வரி வசூலிக்க முடியாது!

வியாழன் 17, அக்டோபர் 2024 12:19:49 PM (IST)

கொரோனா ஊரடங்கின் போது இயக்கப்படாத ஆம்னி பஸ்களுக்கு வரி வசூலிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பரவிய காலத்தில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 2020ம் ஆண்டு ஏப்ரல் முதல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. பின் 2021ம் ஆண்டு செப்டம்பர் முதல் 50 சதவீத பயணிகளுடனும், 2021 அக்டோபர் முதல் நூறு சதவீத பயணிகளுடனும் பேருந்துகளை இயங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.

இருப்பினும் பயணிகள் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்ய ஆர்வம் காட்டாததால் 2021 அக்டோபர் முதல் 2022 டிசம்பர் வரையிலான ஐந்து காலாண்டுகளுக்கு வாகனங்கள் இயக்கப்படவில்லை என அறிக்கை அளித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், அந்த காலக்கட்டத்தில் சாலை வரி வசூலிக்க கூடாது என கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் வாகனங்கள் 50 சதவீத பயணிகளுடனும், 100 சதவீத பயணிகளுடனும் இயக்க அனுமதித்துள்ளதாக கூறி, வாகன இயக்கம் நிறுத்தப்பட்டது குறித்த அறிக்கையை நிராகரித்து அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், கொரோனா காலத்தில் பேருந்துகளை இயக்காததால் ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் இழப்பை சந்தித்துள்ளதாகவும், 2021 அக்டோபர் முதல் 2022 டிசம்பர் வரை ஆம்னி பேருந்துகள் பொது சாலையில் இயக்கப்படவில்லை என்பதால், அந்த பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory