» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணிடம் ரூ.50ஆயிரம் மோசடி : வாலிபர் கைது!
வெள்ளி 18, அக்டோபர் 2024 3:33:36 PM (IST)
மெய்ஞ்ஞானபுரம் அருகே பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணிடம் ரூ.50ஆயிரம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகில் உள்ள உத்திர மாடன் குடியிருப்பு கிராமம் மேற்குத் தெருவில் வசிப்பவர் செல்வராஜன் மனைவி வேல்மதி (55). இவரது வீட்டின் முன்பு நின்று ஒருவர் உடுக்கை அடித்து குறி சொன்னாராம். அப்போது, உங்களது வீட்டில் கெட்ட ஆவி இருக்கிறது. இதற்கு பரிகாரம் செய்தால் உங்கள் குடும்பம் நன்றாக இருக்கும். ரூ.50 ஆயிரம் தந்தால் பரிகாரம் செய்கிறேன் என்று சொன்னாராம்.
இதை நம்பிய வேல்மதி அவரிடம் ரூ.50 ஆயிரம் பணத்தை கொடுத்தாராம். ஆனால் அந்த நபர் பணத்தை வாங்கிக் கொண்டு பூஜை எதுவும் செய்யவில்லைாம். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த வேல்மதி மெய்ஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அனிதா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி ஏரல் அருகே உள்ள சூலைவாய்க்கால் கிராமம் கணபதிபுரம் சேர்ந்த வரதராஜன் மகன் கண்ணன் (30) என்பவரை கைது செய்து ரூ.50 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தார்.