» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெண்கள், குழந்தைகள் விடுதிகளை பதிவு செய்ய ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
புதன் 23, அக்டோபர் 2024 5:41:34 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் பதிவுகள் மேற்கொள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து தனியார் பணிபுரியும் பெண்கள் மகளிர் விடுதிகள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஆகியவை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்குமுறைச்சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015-ன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாத விடுதிகள் https://tnswp.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
இப்பதிவை மேற்கொள்ள அறக்கட்டளை பதிவுப்பத்திரம், FORM D – LICENCE சொந்த கட்டிடம், வாடகை ஒப்பந்தப்பத்திரம், கட்டிட வரைபடம், கட்டிட உறுதிச்சான்று, தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்று காவல்துறையின் சரிபார்ப்பு சான்று (வார்டன் & செக்யூரிட்டி), FSSAI உணவு சான்றிதழ், வருமான வரி & தணிக்கை அறிக்கை மற்றும் சுகாதாரத்துறை சான்று ஆகிய சான்றுகளுடன் https://tnswp.com என்ற இணையதளத்தில் 15.11.2024-க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இப்பதிவு குறித்து சந்தேகங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலக தொடர்பு எண்.0461-2325606 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அவ்வாறு முறையாக பதிவு செய்யப்படாத தனியார் விடுதி மற்றும் இணை நிர்வாகிகள் மீது சட்டப்படி காவல் துறை மூலமாக வழக்குப்பதிவு செய்து அதிகபட்சமாக 2 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.