» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மயிலாடி உழவர் சந்தையில் ஆட்சியர் ஆய்வு

வியாழன் 24, அக்டோபர் 2024 5:42:14 PM (IST)



மயிலாடி உழவர் சந்தையினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- மயிலாடி உழவர் சந்தையினை நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உழவர் சந்தையில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை தாங்களே விற்பனை செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர். 

அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக விவசாயிகளுக்கு உழவர் சந்தை குறித்த விழிப்பிணர்வினை ஏற்படுத்தி அதிகளவு விவசாயிகள் உழவர் சந்தையினை பயன்படுத்தி தங்களது விளைபொருட்களை விற்பனை செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

மேலும் வியாபாரிகள் மற்றும் நுகர்வோரின் வருகையை அதிகரிக்க அனைத்து வகையான காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களை விற்பனை செய்திட துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தோட்டக்கலைத்துறை வாயிலாக செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்களில் மானிய விலையில் வழங்கும் காய்கறி விதைகள், பழமரங்கள் தொகுப்பு, தென்னங்கன்றுகள், மலர்செடிகள் உள்ளிட்டவைகளை உழவர் சந்தை கடைகளில் விற்பனை செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
மகளிர் திட்டத்தின் கீழ் செயல்படும் சுயஉதவிக்குழுக்களால் தயாரிக்கப்படும் கைவினைப்பொருட்கள், நறுமணப் பொருட்கள், தேன், உணவுப்பொருட்கள் உள்ளிட்டவைக உழவர் சந்தையில் விற்பனை செய்வதற்கு, கடைகளை ஒதுக்கீடு செய்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.  முன்னதாக நாகர்கோவில் எஸ்.எல்.பி மேல்நிலைப் பள்ளியினை நேரில் பார்வையிட்டதோடு, தொடக்கப்பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடப்பட்டது என ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்.

ஆய்வுகளில் உதவி செயற்பொறியாளர் முருகேசன், துணை இயக்குநர் (வேளாண் விற்பனை) கீதா, அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory