» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆட்சி அதிகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கும் பங்கு: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

ஞாயிறு 27, அக்டோபர் 2024 6:34:25 PM (IST)



ஆட்சி அதிகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கும் பங்கு அளிக்கப்படும் என்று தவெக மாநில மாநாட்டில் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அறிவித்தார். 

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் இன்று நடைபெற்றது. மேடை ஏறிய தவெக தலைவர் விஜய் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அவர் பேசியதாவது, "நம்முடன் இணைந்து அரசியல் சேவையற்ற வருவோரை உள்ளம் மகிழ்ந்து வரவேற்போம். கூட்டணிக்கு வருவோருக்கும் ஆட்சியில் பங்கீடு அளிக்கப்படும்

பகுத்தறிவு புரட்சியாளர் தந்தை பெரியார் எங்கள் கொள்கைத் தலைவர். பெரியார் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்கப் போவதே இல்லை. எங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை. யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பதே எங்களுடைய நிலைப்பாடு. பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவு சிந்தனை உள்ளிட்ட பெரியார் சொன்ன இவை அனைத்தையும் நாங்கள் முன்னெடுக்கப் போகிறோம்.

மதச்சார்பின்மைக்கும், நேர்மையான நிர்வாக செயல்பாட்டுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் பச்சைத் தமிழர் பெருந்தலைவர் காமராஜரை எங்கள் வழிகாட்டியாக ஏற்கிறோம். அடுத்தது எங்கள் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர். சமூகத்தில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துபவர்கள் அம்பேத்கர் பெயரைக் கேட்டாலே நடுங்கிப் போய்விடுவார்கள். அவரை எங்கள் வழிகாட்டி என்று சொல்வதில் பெருமை கொள்கிறோம்.

பெண்களை கொள்கைத் தலைவர்களாக ஏற்று களத்தில் வரும் முதல் அரசியல் கட்சி தமிழக வெற்றிக் கழகம்தான். அந்தவகையில் நாம் இந்த மண்ணை கட்டி ஆண்ட பேரரசி வேலு நாச்சியார், இந்த மண்ணின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட அஞ்சலையம்மாள் இருவரும் நம்முடைய கொள்கைத் தலைவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory