» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கூட்டணி குறித்த விஜய் பேச்சில் எனக்கு உடன்பாடு இல்லை: சீமான் கருத்து!
திங்கள் 28, அக்டோபர் 2024 10:31:34 AM (IST)
விஜய் பேச்சில் எனக்கு உடன்பாடு இல்லை. நாங்கள் யாரோடும் கூட்டணி இல்லை என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
மதுரையில் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: தவெக தலைவர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள அதே கோபத்துடன், 13 ஆண்டுகளுக்கு முன் நான் அரசியலுக்கு வந்தேன். திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என விஜய் சொல்கிறார். அது எங்கள் கொள்கைக்கு நேர் எதிரானது.
திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றல்ல. அது வேற.. இது வேற.. இது என் நாடு, என் தேசம் இங்கு வாழுகின்ற மக்களுக்கான அரசியல் தமிழ் தேச அரசியல். அவருடைய கொள்கையும் எங்கள் கொள்கையும் ஒத்துப்போகவில்லை. விஜய் பேச்சில் எனக்கு உடன்பாடு இல்லை. பெரியாரின் கொள்கைகளை முன்னெடுப்பேன் என்ற விஜய் பேச்சிலும் ஒத்துப்போகவில்லை. இது குழப்பமான கொள்கை முடிவு.
மக்களிடம் செல்வதற்கு கருத்தியல் புரட்சி வேண்டும்; பிரச்சினையின் அடிவேர் தெரிய வேண்டும். பெரியாரை ஏற்கும்போது திராவிடத்தையும் ஏற்கிறார்கள்; இதையேதான் திமுகவும் செய்கிறது. என் பயணம் என் கால்களை நம்பித்தான்; யார் காலையும் நம்பி பயணிக்காதவன். நான் மிகுந்த தெளிவான பயணத்தை கொண்டவன். நான் தனித்து போட்டியிடுவேன் என ஏற்கெனவே சொல்லிவிட்டேன்; நாங்கள் யாரோடும் கூட்டணி இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
இந்தியன்Oct 29, 2024 - 11:57:17 AM | Posted IP 162.1*****
கடைசி வரை இவர் இப்படித்தான் இருப்பார்.ஒருபோதும் முன்னேற்றம் இருக்காது.
HI HI HIOct 29, 2024 - 03:45:19 PM | Posted IP 162.1*****