» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரியில் கண்ணாடி கூண்டு பாலம் ஜனவரியில் திறப்பு: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு?
சனி 9, நவம்பர் 2024 3:52:29 PM (IST)
கன்னியாகுமரியில் கண்ணாடி கூண்டு பாலத்தை வரும் 2025 ஜனவரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் முக்கியமான நகரங்களில் ஒன்றான கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளது. கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை,133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவை நடைபெறுகிறது.
கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடியில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்பாலத்தை திறந்துவைத்து, திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் 25ம் ஆண்டு விழாவிலும் கலந்துகொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது.