» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் நவ.21ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்!

சனி 9, நவம்பர் 2024 4:11:24 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 21ஆம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 21.11.2024 அன்று முற்பகல் 11.30 மணி அளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. 

இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு உருளை விநியோகஸ்தர்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளார்கள். எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். எரிவாயு நுகர்வோர் தங்களது குறைகளை மனுவாக தட்டச்சு செய்தோ அல்லது தெளிவாக எழுதியோ அன்றைய தினம் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் நேரில் அளித்திடலாம்.  

இந்நேர்வில் பொதுமக்களும், நுகர்வோர்களும் பெயர் மாற்றம், புதிய எரிவாயு உருளை வழங்குவதில் கால தாமதம், எரிவாயு விநியோகஸ்தர்களின் சேவையில் குறைபாடுகள், டெபாசிட் தொகை திரும்ப பெறல், புதிய இணைப்பு கோரியதன் நிலை, எரிவாயு உருளைகளுக்கான மானியம் உரிய வங்கி கணக்கில் உரிய காலத்தில் வரவு வைக்கப்படாதிருத்தல், எரிவாயு உருளையை விநியோகம் செய்யும் நபர்கள் மீது ஏதும் குறைபாடுகள் மற்றும் எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோரை பாதிக்கும் எந்த குறைகளையும் இக்கூட்டத்தில் எடுத்துரைத்து தீர்வு காணவும் பொதுமக்கள் இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory