» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேசிய பத்திரிகையாளர் தினம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சனி 16, நவம்பர் 2024 10:54:11 AM (IST)

தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தேசிய பத்திரிகையாளர் தினம் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 16-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் "தேசிய பத்திரிகையாளர்கள் தினமான இன்று, உண்மையையும் பொறுப்புணர்வையும் நிலைநிறுத்தும் ஊடகவியலாளர்களின் இடைவிடாத முயற்சிகளுக்கு நாங்கள் தலைவணங்குகிறோம். 

அதிகரித்து வரும் சகிப்பின்மைக்கு மத்தியில், பத்திரிகையாளர்களின் தைரியம், ஜனநாயகத்தின் கடைசி பாதுகாப்பு அரணாக உள்ளது. பயம் அல்லது ஒரு சார்பால் கட்டுக்கடங்காமல் பத்திரிகைத் துறை செழிக்க வேண்டும். ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் குரல்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்போம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory