» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

செவ்வாய் 19, நவம்பர் 2024 12:19:15 PM (IST)

சென்னையில் கடந்த 2014-ல் வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கில் கல்பனா என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் தலித் ஏழில்மலையின் மருமகன் பிரபல வழக்கறிஞர் காமராஜ். இவர் 2014ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இவரும் சமீபத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். சென்னை ரெட்டேரி அருகே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் குறித்து சென்னை கொரட்டூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கல்பனா, கார்த்திக், ஆனந்த் உள்ளிட்ட பலரை கைது செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்திற்கு மாற்ற வேண்டும் என சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனடிப்படையில், மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு, 2015ம் ஆண்டு முதல் மதுரையில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில், இந்த வழக்கை விரைந்து விசாரணை நடத்தி உரிய தீர்ப்பு வழங்க வேண்டும் என 2021ம் ஆண்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு மதுரை அமர்வு, மூன்று மாதங்களில் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனிடையே கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிடக்கோரி, வழக்கறிஞர் காமராஜின் சகோதரி மேரி தேன்மொழி ஐகோர்ட்டு மதுரை அமர்வில் மீண்டும் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், "இந்த வழக்கை இவ்வளவு நாள் காலதாமதம் செய்ய என்ன காரணம்? என்பது குறித்து மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், உடனடியாக மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி தரப்பில், "இந்த வழக்கு விசாரணை முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டது. நவம்பர் 19ம் தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வழக்கறிஞர் காமராஜ் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி கல்பனாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றம்சாட்டப்பட்ட ஆனந்தன், கார்த்திக்கை விடுதலை செய்தது ஐகோட்டு உத்தரவிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory