» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மூளைச்சாவு அடைந்து உறுப்புக்களை தானம் செய்தவருக்கு அரசு சார்பில் மரியாதை

புதன் 20, நவம்பர் 2024 12:02:05 PM (IST)



ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்து உறுப்புக்களை தானம் செய்தவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. 

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பகுதியைச் சார்ந்த சுப்பிரமணியன் (வயது 49) கடந்த 15.11.2024 அன்று மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தார் முன் வந்தனர். அதனை தொடர்ந்து நேற்று ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து சுப்பிரமணியனின் உள் உறுப்புகள் தானத்திற்காக ஆம்புலன்ஸ் மூலம் மதுரை, திருச்சி திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

பின்பு அவரது உடலை உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து மூளைச்சாவு அடைந்து தனது உறுப்புக்களை தானம் செய்த சுப்பிரமணியன் அவர்களின் உறவினர்களுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட நிர்வாகத்தால் இரங்கலை தெரிவித்ததோடு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி அன்னராது உடலுக்கு மலர் வளையம் அணிவித்து மரியாதை செலுத்தினார்.


மக்கள் கருத்து

என்ன உலகம் இதுNov 20, 2024 - 04:32:37 PM | Posted IP 162.1*****

இறந்து போனால் மரியாதை , ஆனால் உயிரோடு இருக்கும்போது மரியாதை இல்லை இது தான் உலகம்

NAAN THAANNov 20, 2024 - 02:44:07 PM | Posted IP 162.1*****

REALLY YOU ARE THE PRIDE SIR HATS OFF COMRADE

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory