» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இந்திய வரலாற்றைப் புரட்டிபோட்ட புரட்சியாளர் வி.பி.சிங்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!
புதன் 27, நவம்பர் 2024 12:19:50 PM (IST)
"இந்திய வரலாற்றைப் புரட்டிபோட்ட புரட்சியாளர் வி.பி.சிங்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமரும், சமூக நீதிக் காவலருமான வி.பி.சிங்கின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் வி.பி.சிங்கின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்திய வரலாற்றைப் புரட்டிபோட்ட புரட்சியாளர் வி.பி.சிங்" என்று அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: இந்திய வரலாற்றைப் புரட்டிபோட்ட புரட்சியாளர் - சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் புகழ் ஓங்குக! உயர்கல்வியிலும் - வேலைவாய்ப்புகளிலும் - தலைமைப் பொறுப்புகளிலும் நமது திறமையால் சாதனை படைத்து அவருக்கு நன்றி செலுத்துவோம்! சாதிக்கப் பிறந்தவர்களுக்குச் சாதி தடையில்லை என்பதை நிறுவுவோம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.