» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விழுப்புரம் வெள்ளப் பாதிப்பு: மெய்நிகர் மீட்புபடை அறக்கட்டளை சார்பில் நிவாரண உதவிகள்!
புதன் 4, டிசம்பர் 2024 3:15:30 PM (IST)
விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மெய்நிகர் மீட்புபடை அறக்கட்டளை சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
கோயம்புத்தூர் எல்சி மருத்துவமனையின் மெய்நிகர் மீட்புபடை அறக்கட்டளை சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களாக அரிசி, மளிகை பொருட்கள், பிஸ்கட்ஸ் மற்றும் போர்வை அடங்கிய பொருட்களை விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிவாரண பொருட்களை எல்சி மருத்துவமனையின் மருத்துவர்கள் வித்யா ராஜன், ராஜன் மற்றும் ஆர்ஏஏசி ரவீந்திரன் ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிஆர்டிஓ ஷிர்மிளாவிடம் ஒப்படைத்தனர்.