» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அங்கன்வாடி சுற்றுச்சுவர் அமைக்கும் பணி துவக்கம் : மக்கள் கோரிக்கை நிறைவேற்றம்!
சனி 7, டிசம்பர் 2024 5:48:22 PM (IST)
நாகர்கோவில் மாநகராட்சி மேலப் பெருவிளை பொதுமக்களின் 3- வருட கோரிக்கையான அங்கன்வாடி மையம் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி இன்று தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 3-வது வார்டு மேல பெருவிளை பகுதியில் அங்கன்வாடி மையம் ஒன்று செயல்பட்டு வந்தது. இதில் சுற்றுச் சுவர் இல்லாமல் திறந்த வெளியாக இருந்து வந்தது இதனால் ஆடு, மாடு நாய்கள் போன்றவைகள் உள்ளே சுற்றித்திரிந்ததால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வந்தது.
இதனையடுத்து 3- வருடங்களாக சுற்றுச் சுவர் அமைத்து குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கிடவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் அதனை பார்வையிட்டு தற்போது நடவடிக்கை மேற்கொண்டு ரூ.4. 95 லட்சம் மதிப்பில் சுற்றுச் சுவர் அமைக்கும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டது. இதனை மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர் செல்வகுமார் மாநகராட்சி அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர் அருள் சபிதா ரெக்ஸ்லின் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச் சுவர் அமைத்து தந்த மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளின் பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.