» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சட்டம்-ஒழுங்கை நிலைதாட்ட உறுதியான நடவடிக்கை: ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

சனி 21, டிசம்பர் 2024 5:53:01 PM (IST)

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை நிலைதாட்ட உறுதியான நடவடிக்கையை முதலமைச்சர் எடுக்க வேண்டுமென்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்த ஒரு நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலைநாட்டப்படுகிறதோ அந்த நாட்டில் தான் பொருளாதாரம் வளர்ச்சி அடையும், மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு இருக்கும், தொழில் முனைவோர்கள் தொழில் துவங்க முன் வருவார்கள். ஆனால், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டு இருக்கிறது. சட்டம்-ஒழுங்கு சீரழிவில் இந்தியாவிலேயே முதன் முதன் மாநிலம் தமிழ்நாடு என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகிக் கொண்டே இருக்கிறது.

அண்மையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில், மக்கள் நடமாட்டம் மிகுந்த, காவல் துறையினர் பாதுகாப்பில் இருந்த நேரத்தில், திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்தின் முன்பு பட்டப்பகலில் ஒருவர் கொலை செய்யப்படுகிறார் என்றால், அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து இருக்கிறது. கொலை வழக்கில் கைதாகி குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர், ஓராண்டிற்கு பின் வெளியில் வருகிறார். வேறு வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்திற்கு வருகிறார் என்றால், அவர்மீது தாக்குதல் நடத்தப்படும் என்பது காவல் துறை அறிந்த விஷயம்.

இந்தச் சூழலில், காவல் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால், இந்தக் கொலையை தடுத்திருக்கலாம். ஆனால், இதைச் செய்ய தி.மு.க. அரசு தவறிவிட்டது. இது ஒருபுறம் என்றால், மறுபுறம் நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவியைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டுசட்டம் படிக்கும் மாணவர் திருநெல்வேலி மாவட்டம், கமிட்டி நடுநிலைப் பள்ளி அருகே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்களுக்கு எல்லாம் மூல காரணமாக விளங்குவது மதுவும். போதைப் பொருட்களும்தான். தி.மு.க. அரசு சட்டம்-ஒழுங்கை சீரழித்து வருவதை தெரிந்துதான் சென்ளை உயர் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து மேற்படி வழக்கு விசாரணையை எடுத்துக் கொண்டு சாமாரியான கேள்விகளை எழுப்பி உள்ளது.

மேற்படி கொலை சம்பவம் தொடர்பாகவும், நீதிமன்றங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டதோடு மட்டுமல்லாமல், திருநெல்வேலி வழக்கறிஞர்களிடமும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. மொத்தத்தில், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் தி.மு.க. அரசு படுதோல்வி அடைந்துவிட்டது. மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. காவல் துறையினரை கண்டு குற்றவாளிகள் அஞ்சும் நிலை இல்லை. ஜம்மு காஷ்மீரை விட மோசமான நிலைமை தமிழ்நாட்டில் நிலவுகிறது.

சட்டம் ஒழுங்கு தொடர்பாக, நான் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பல அறிக்கைகள் வெளியிட்டும், நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரியவில்லை. மாறாக, நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை நிலைதாட்ட உறுதியான நடவடிக்கையை முதலமைச்சர் எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory