» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ விசாரணை : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

வெள்ளி 27, டிசம்பர் 2024 10:35:54 AM (IST)

அண்ணாமலை பல்கலை., வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவத்தில், மாணவியின் தனிப்பட்ட விவரங்களுடன் முதல் தகவல் அறிக்கை இணையத்தில் காவல்துறை எப்படி வெளியிட்டது? பாதிக்கப்பட்டவரின் பெயரை வெளியிடக்கூடாது என்ற அடிப்படைகூட திமுக அரசின் காவல்துறைக்குத் தெரியாதா?

இந்த சம்பவத்தில் கைதான ஞானசேகரன் திமுக உறுப்பினரே இல்லை என்று அமைச்சா் ரகுபதி பேட்டியளித்துள்ள நிலையில், அவா் திமுகவின் பகுதி துணை அமைப்பாளா் பொறுப்பில் உள்ளதற்கான பல ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.

மேலும், கைது செய்யப்பட்ட ஞானசேகரன், இரவே விடுவிக்கப்பட்டு, மீண்டும் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வருகின்றன. இவ்வளவு முக்கியமான வழக்கின் குற்றவாளியை எதற்கு காவல்துறை விடுவிக்க முயற்சித்தது? ஆளும் கட்சியான திமுகவில் ஞானசேகரன் பொறுப்பில் இருந்ததை இத்துடன் பொருத்திப் பாா்த்தால், இவ்வழக்கில் அரசியல் அழுத்தம் இருப்பதற்கான சந்தேகம் மேலும் வலுக்கிறது.

முதல் தகவல் அறிக்கையில் ஞானசேகரனுடன் இன்னொரு நபருக்கும் சம்பவத்தில் தொடா்பு உள்ளது தெரியவந்துள்ளது. யாா்அந்த நபா்? யாரைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறது? இனி இந்த வழக்கை திமுக அரசின் காவல்துறை விசாரிப்பதற்கு தாா்மிக தகுதியில்லை. எந்தவித அரசியல் இடையூறும் இன்றி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory