» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு : விஜய் வசந்த் எம்.பி., இரங்கல்!

வெள்ளி 27, டிசம்பர் 2024 10:48:49 AM (IST)

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு விஜய் வசந்த் எம்பி இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரும் உலகின் தலைசிறந்த பொருளாதார மேதையுமான  டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் மறைவிற்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

எல்லா உலக நாடுகள் மத்தியில் இந்திய பொருளாதார வல்லரசாக மாறுவதற்கு பெரும் பங்கு வகித்தவர் டாக்டர் மன்மோகன் சிங். மத்திய நிதி அமைச்சராக அவர் பணியாற்றிய காலகட்டத்தில் அவர் கொண்டு வந்த கொள்கைகளும் மறுமலர்ச்சி திட்டங்களும் தான் இந்தியா இன்று உலக நாடுகள் மத்தியில் பொருளாதார ஜாம்பவானாக விளங்க காரணமாக அமைந்தது.

அதன் பின்னர் அவர் பிரதமராக பணியாற்றிய 10 வருடங்களில் இந்தியா பல்வேறு புதிய சாதனைகளை படைத்து பல வளர்ச்சி பாதைக்கு அவர் வித்திட்டார். அவரது தலைமையிலான அரசு கொண்டுவந்த ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உலக அளவில் பாராட்டப்பட்டு லட்சக்கணக்கான ஏழை மக்களை ஏழ்மையிலிருந்து மீட்டுக் கொண்டு வருவதற்கு காரணமாக அமைந்தது.

தகவல் அறியும் உரிமை, கல்வி கற்கும் உரிமை என பல்வேறு அடிப்படை உரிமைகளை மக்களுக்கு பெற்று தருவதற்கு முக்கிய காரணமாக அவர் அமைந்தார். உலக நாடுகளுடன் சுமூகமான உறவை மேற்கொண்டு உலக நாடுகளின் மத்தியில் இந்தியா கௌரவமான நிலையை அடைவதற்கு வழிவகை செய்தார். மாநிலங்களுக்கு வழங்கும் உரிமைகளை வழங்கி ஜனநாயகம் நாட்டில் தழைத்தோங்க காரணமாக அமைந்தார். விவசாயிகள் தொழிலாளர்கள் இளைஞர்கள் மாணவர்கள் மகளிர் என அனைத்து தரப்பு மக்களுக்கும் அவர் மேற்கொண்ட திட்டங்கள் இன்று பெரும் உதவியாக அமைந்துள்ளது

அத்தகைய ஒரு தலைவரின் மறைவு இந்த நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரை பிரிந்து வாடும் அவரது உறவினர்களுக்கு மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் அனைவருக்கும் எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறேன். ரிசர்வ் வங்கியின் நோட்டு தாள்களில் மட்டுமின்றி ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் டாக்டர் மன்மோகன் சிங் என்ற கையொப்பம் என்றும் பதிந்திருக்கும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory