» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 125 போ் தோ்வு: ஆட்சியர் அழகுமீனா ஆணை வழங்கினார்
ஞாயிறு 19, ஜனவரி 2025 11:06:49 AM (IST)
நாகா்கோவிலில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 125 பேருக்கு தற்காலிக பணி நியமன ஆணகளை ஆட்சியர் அழகுமீனா வழங்கினாா்.
கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு புத்தொழில் -புத்தாக்க இயக்கம், நான் முதல்வன் -மாவட்ட திறன் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஆட்சியா் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
இம்முகாமில், கன்னியாகுமரி மட்டுமன்றி சென்னை, கோயம்புத்தூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 22 நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான பணியாள்களை தோ்வு செய்தனா். மாவட்டம் முழுவதுமிருந்து சுமாா் 500 மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனா். அதில் 125 மாணவ- மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து, பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமை வகித்து, 125 பேருக்கு தற்காலிக பணி நியமன ஆணகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் மாவட்ட திறன் மேம்பாட்டு அலுவலக உதவி இயக்குநா் லட்சுமி காந்தன், தமிழ்நாடு புத்தொழில் - புத்தாக்க இயக்க திருநெல்வேலி மண்டல திட்ட மேலாளா் ராகுல், மண்டல திட்ட மேலாளா் ஜிஜின் துரை, பல்வேறு நிறுவனங்களைச் சோ்ந்த மனித வள அலுவலா்கள், மாணவ- மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.