» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம்: அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு
புதன் 31, டிசம்பர் 2025 10:16:12 AM (IST)

தூத்துக்குடியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
தூத்துக்குடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட தலைவர் மீராசா தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் அபூபக்கர் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் வரும் 2026 தேர்தலில் இஸ்லாமியர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு திமுக கூட்டணி மீண்டும் அமோகமாக வெற்றி பெற உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அமைச்சர் கீதா ஜீவன் பேசும்போது 24 மணி நேரமும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாங்கள் உழைத்துக் கொண்டே இருக்கிறோம். ஆகையால் இன்று தமிழக அனைத்து துறையிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உள்ளது. மதசார்பற்ற இந்த கூட்டணியை மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பது என்ற ஒரே குறிக்கோளுடன் அதிமுக பிஜேபி செயல்பட்டு வருகிறது ஆகையால் நாம் ஒற்றுமையுடன் இருந்து உழைக்க வேண்டும். மீண்டும் திமுக ஆட்சி மலர்ந்திட அனைவரும் பாடுபட வேண்டும் என்றார். கூட்டத்தில் எம்எஸ்எப் ரகுமான், திரேஸ்புரம் மீராசா, மாமன்ற உறுப்பினர் மும்தாஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜனவரியில் பள்ளிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை : மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி!!
புதன் 31, டிசம்பர் 2025 12:54:28 PM (IST)

கன்னியாகுமரியில் 2025-ம் ஆண்டின் கடைசி சூரிய உதயத்தை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!
புதன் 31, டிசம்பர் 2025 12:00:25 PM (IST)

வட மாநில இளைஞரை தாக்கியவர்களுக்கு கடும் தண்டனை : சரத்குமார் வலியுறுத்தல்!
புதன் 31, டிசம்பர் 2025 11:43:23 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்பியாக சிலம்பரசன் நியமனம் : காவல்துறை அதிகாரிகள் பதவி உயர்வு!
புதன் 31, டிசம்பர் 2025 8:19:21 AM (IST)

நவதிருப்பதி கோவில்களில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்
புதன் 31, டிசம்பர் 2025 8:09:13 AM (IST)

குமரி மாவட்டத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் துவக்கம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 5:27:33 PM (IST)


