» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது: தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டு
செவ்வாய் 30, டிசம்பர் 2025 4:57:00 PM (IST)
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது என்று தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: சென்னையிலிருந்து திருத்தணி சென்ற ரயிலில் இளைஞர்கள் சிலர், நேற்று மற்றொரு இளைஞரைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம், தமிழகம் எத்தகைய அபாயகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது என்ற அச்சத்தையும் அதிர்வலைகளையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது.இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை அரசு முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவில்லை. இளைஞர்கள் எக்கேடும் கெட்டு வீணாய்ப் போனால் நமக்கென்ன என்ற ஆளும் அரசின் அலட்சியத்தையும் பொறுப்பின்மையையுமே இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. தமிழகத்தில் இளைஞர்களை நல்வழிப் பாதையில் கொண்டுசெல்லும் திட்டங்கள் இல்லை.
இளைஞர்கள் நல்ல முறையில் கல்வி கற்க, ஏற்ற சூழல் இல்லை. தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் இல்லை. புத்தாக்கம் இல்லை. புதிய முயற்சிகளுக்கு ஊக்கம் இல்லை. இவை எவற்றையும் ஏற்படுத்திக் கொடுக்காமல், யாருக்காக இந்த ஆட்சியை நடத்துகிறீர்கள்? எஞ்சியிருக்கக் கூடிய ஆட்சிக் காலத்திலாவது போதைப் பொருட்கள் புழக்கத்தை முழுவதுமாகக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கபட நாடக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் துவக்கம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 5:27:33 PM (IST)

டெல்லி குடியரசு தின விழா: தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி
செவ்வாய் 30, டிசம்பர் 2025 4:44:37 PM (IST)

ஆர்எஸ்எஸ் நினைப்பதை சீமான் பிரதிபலிக்கிறார்: திருமாவளவன் பேச்சு
செவ்வாய் 30, டிசம்பர் 2025 3:53:04 PM (IST)

திமுக தேர்தல் அறிக்கை: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 3:46:50 PM (IST)

வடமாநில இளைஞரை சிறுவர்கள் தாக்கிய வீடியோ... தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 12:14:42 PM (IST)

ஆவின் பால் பாக்கெட்டுகளில் எஸ்ஐஆர் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 11:28:24 AM (IST)


