» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆவின் பால் பாக்கெட்டுகளில் எஸ்ஐஆர் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 11:28:24 AM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட தகுதிவாய்ந்த வாக்காளர்கள் அனைவரும் 2026 இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதன் முக்கியத்துவம் குறித்து, ஆவின் பால் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "இந்திய தேர்தல் ஆணையத்தால் 01.01.2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தியாகும் இளம் வாக்காளர்கள் மற்றும் 19.12.2025 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்-2026 குறித்து பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்ஒருபகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட ஒவ்வொரு குடிமக்களின் வீட்டிற்கும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்-2026 குறித்து, விளம்பரப்படுத்தும் வகையில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் Election SIR Form 6 – Final date 18.01.2026 அச்சிடப்பட்டு, இன்று (29.12.2025) முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வசிக்கும் 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள் மற்றும் 19.12.2025 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத குடிமக்கள் அனைவரும் வரும் சனிக்கிழமை (03.01.2026), ஞாயிற்றுக்கிழமை (04.01.2026) ஆகிய நாட்களில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது.
இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி தங்களது பெயர்கள் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்துகொள்ள தங்களது விண்ணப்பங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் கடைசி நாளான 18.01.2026க்குள் வழங்கிட மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் துவக்கம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 5:27:33 PM (IST)

தமிழகத்தில் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது: தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டு
செவ்வாய் 30, டிசம்பர் 2025 4:57:00 PM (IST)

டெல்லி குடியரசு தின விழா: தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி
செவ்வாய் 30, டிசம்பர் 2025 4:44:37 PM (IST)

ஆர்எஸ்எஸ் நினைப்பதை சீமான் பிரதிபலிக்கிறார்: திருமாவளவன் பேச்சு
செவ்வாய் 30, டிசம்பர் 2025 3:53:04 PM (IST)

திமுக தேர்தல் அறிக்கை: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 3:46:50 PM (IST)

வடமாநில இளைஞரை சிறுவர்கள் தாக்கிய வீடியோ... தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 12:14:42 PM (IST)


