» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கில் கடும் தண்டனை: மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்

வியாழன் 23, ஜனவரி 2025 10:45:42 AM (IST)

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் தண்டனைகளை கடுமையாக்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.

சமீபத்தில் சட்டசபையில், சிறுமியர் மீதான பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும், பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்ட மசோதாவை, முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். பாலியல் வன்கொடுமைக்கு ஆயுள்; 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியர் மீதான பாலியல் வன்கொடுமைக்கு துாக்கு; பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் உள்நோக்கத்துடன் தாக்குதல் நடத்தினால் மூன்று முதல் ஐந்தாண்டுகள் வரை சிறை.

பெண்ணை பின்தொடர்ந்தால் முதல்முறை ஐந்தாண்டு, இரண்டாம் முறை ஏழு ஆண்டுகள் வரை சிறை; அமிலம் பயன்படுத்தி காயம் ஏற்படுத்தினால் ஆயுள் அல்லது துாக்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இச்சட்டத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த மசோதா மீதான விவாதம் சட்டசபையில் நடந்த போது, காங்கிரஸ், விசிக., இந்திய கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் வரவேற்றனர்.

அதை தொடர்ந்து குரல் ஓட்டெடுப்பு வாயிலாக, இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. இந்நிலையில் இன்று (ஜன.,23) பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் தண்டனைகளை கடுமையாக்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்த பிறகு சட்டம் ஆகும். பின்னர் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory