» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் பறவைக் கணக்கெடுப்புக்கான பயிற்சி : இயற்கை ஆர்வலர்களுக்கு அழைப்பு!!
வியாழன் 23, ஜனவரி 2025 12:56:16 PM (IST)
தூத்துக்குடியில் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் நாளை (ஜன.24) பறவைகள் கணக்கெடுக்கும் பயிற்சி நடைபெற உள்ளது.
திருநெல்வேலி மாவட்ட பசுமைக் குழு, முத்து நகர் இயற்கை அமைப்பு, தூத்துக்குடி, நெல்லை இயற்கைச் சங்கம், திருநெல்வேலி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தென்காசி மற்றும் ஈக்கோ ஜெசியூட், மதுரை ஆகிய நிறுவனங்கள் சார்பில் மணிமுத்தாறில் இயங்கி வரும் அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம் ஜனவரி 24, 25, 26 ஆகிய தேதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இக்கணக்கெடுப்பில் கலந்து கொள்ள உள்ளவர்களுக்கு 24ம் தேதி மதியம் 2.30 மணிக்கு கணக்கெடுப்பு குறித்த பயிற்சி வழங்கப்படும். திருநெல்வேலியில் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியிலும், தூத்துக்குடியில் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல் நிலைப் பள்ளியிலும், தென்காசி மாவட்டத்தில் இலஞ்சி டிடிடிஏடி.எஸ். டேனியல் ராஜம்மாள் பெண்கள் கல்வியியல் கல்லூரிலும் பயிற்சி வகுப்பு நடைபெறும்.
கடந்த வருடங்களில் பயிற்சி வகுப்பு திருநெல்வேலியில் மட்டுமே நடைபெற்றது, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் பங்கேற்பை அதிகரிக்க இம்முறை அம்மாவட்டங்களிலும் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கணக்கெடுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் முனைவர். அ. தணிகைவேல் 95244 25519 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது..