» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக துணைப் பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமனம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வெள்ளி 11, ஏப்ரல் 2025 12:02:49 PM (IST)

திமுக துணைப் பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி இந்து மதத்தின் சைவ, வைணவ மார்க்கங்கள் பற்றியும், பெண்களைப் பற்றியும் இழிவாகப் பேசியுள்ளர். அவரது பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது. 

இந்நிலையில், பொன்முடி பேச்சை ‘அருவருப்பானது’ என்று குறிப்பிட்டு திமுக எம்.பி. கனிமொழி இன்று காலை எக்ஸ் சமூகவலைதளத்தில் கண்டன ட்வீட் செய்திருந்தார். இத்தகைய சூழலில் பொன்முடியின் கட்சிப் பதவியை பறித்தும் அந்தப் பதவியில் திருச்சி சிவாவை நியமித்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கழக சட்டதிட்ட விதி: 17 - பிரிவு :3-ன்படி கழக கொள்கைப் பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் திருச்சி சிவா, எம்.பி.யை, அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, திமுக துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

இது தான் அரசியல்Apr 11, 2025 - 12:06:58 PM | Posted IP 172.7*****

சசிகலா புஸ்பா கூட உல்லாசமா இருந்த ஆளா? ஓ பெரியார் மண் ஆ . அப்போ சரி சரி ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory