» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாற்றுத்திறன் குழந்தைகள் ஒரு நாள் இன்ப சுற்றுலா: ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்!
வெள்ளி 11, ஏப்ரல் 2025 4:02:54 PM (IST)

குமரி மாவட்டத்தில் மாற்றுத்திறன் குழந்தைகள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கான ஒரு நாள் இன்ப சுற்றுலாவினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை, மாவட்ட சுற்றுலாத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் மாற்றுத்திறன் குழந்தைகள் மற்றும் மாணவ மணாவியர்களுக்கான ஒரு நாள் இன்ப சுற்றுலாவினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவிக்கையில்-
தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தன்நம்பிக்கையுடன் தங்களது வாழ்வினை எதிர்கொள்ளும் வகையில் அவர்களுக்கென கல்வி உதவித்தொகை, இலவச பேருந்து பயண அட்டை, மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகள், செயற்கை கால்கள், தையல் இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, காதொலி கருவி, திறன்பேசி, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை, மாவட்ட சுற்றுலாத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் சிறப்பு குழந்தைகளுக்கு ஒரு நாள் சுற்றுலா செல்லும் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்கீழ் செயல்படும் ரிஜாய்ஸ் ஆட்டிசம், சாந்தி நிலையம், மனவளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் ஓரல் காதுகேளாதோர்களுக்கான ஆரம்ப கால பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் சிறப்பு குழந்தைகள், சிறப்பாசிரியர்கள் மற்றும் பராமரிப்பாளர் என மொத்தம் 60 நபர்கள் சுற்றுலா பயணம் மேற்கொள்ளவுள்ளார்கள்.
இன்பசுற்றுலா செல்லும் மாற்றுத்திறன் மாணவர்கள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து பத்மநாபபுரம் அரண்மனை, உதயகிரிகோட்டை, திற்பரப்பு அருவி மற்றும் மாத்தூர் தொட்டி பாலம் பார்த்துவிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு இன்று மாலை வந்தடைவார்கள். இவர்களுக்கான மதியஉணவு உட்பட அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலத்தின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மாவட்ட மாவட்ட ஆட்சியர், சுற்றுலா செல்லும் மாற்றுத்திறன் குழந்தைகள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு கை கொடுத்து, வாழ்த்து தெரிவித்து புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு, மாணவர்கள் செல்லும் சுற்றுலா பேருந்தில் ஏறி அனைவரும் நன்றாக மகிழ்ச்சியுடன் இப்பயணத்தினை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தினேஷ் சந்திரன், மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மேலாளர் கார்த்திக் அமர்நாத், மாற்றுத்திறன் மாணவ மாணவியர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் 2026லும் திராவிட மாடல் ஆட்சிதான்: முதல்வர் ஸ்டாலின் உறுதி!!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:56:05 PM (IST)

தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:24:38 PM (IST)

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி : ஆட்சியர் தகவல்!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:18:54 AM (IST)

திருப்பதிக்கு நிகராக திருச்செந்தூர் கோவில் வடிவமைப்பு : தமிழக முதல்வருக்கு சேகர்பாபு புகழாரம்
வெள்ளி 18, ஏப்ரல் 2025 8:58:07 AM (IST)

அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 17, ஏப்ரல் 2025 5:50:13 PM (IST)

காவல்துறைக்கு துப்பாக்கி கொடுப்பது என்கவுன்ட்டர் செய்வதற்கு அல்ல: உயர்நீதிமன்றம் கண்டனம்
வியாழன் 17, ஏப்ரல் 2025 5:41:53 PM (IST)
