» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாஜக மாநிலத் தலைவராக போட்டியின்றி தேர்வாகிறார் நயினார் நாகேந்திரன்!
வெள்ளி 11, ஏப்ரல் 2025 4:44:34 PM (IST)
தமிழக பாஜகவின் 13-வது மாநிலத் தலைவர் ஆகிறார் நயினார் நாகேந்திரன். இது குறித்து நாளை (ஏப்.12) அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக மாநில தலைவர் தேர்தலுக்கு விருப்ப மனு தாக்கல் இன்று (ஏப்.11) நடைபெற்றது. தமிழக பாஜகவில் மாநில தலைவர் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இவ்விரு பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என தமிழக பாஜக தேர்தல் அதிகாரி எம்.சக்கரவர்த்தி அறிவித்திருந்தார். இதற்கான, விருப்பமனுக்களை இன்று மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை போட்டியிட விருப்பமுள்ளவர்கள் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பாஜக நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு விருப்பமனு அளித்தார். அவரைத் தவிர, மாநிலத் தலைவர் பதவிக்கு வேறு யாரும் விருப்பமனு அளிக்காததால், போட்டியின்றி அப்பதவிக்கு அவர் தேர்வு செய்யப்படுவதாக கட்சியின் தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதையடுத்து, தமிழக பாஜகவின் 13-வது மாநிலத் தலைவர் ஆகிறார் நயினார் நாகேந்தரன். இது குறித்து நாளை (ஏப்.12) அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும் மற்றும் குறைந்தது 10 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராகவும் உள்ளவர் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆந்திரா, சிக்கிம் போன்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் இந்த விதியை தளர்த்தி, நயினார் நாகேந்திரனை மாநிலத் தலைவராக தேர்வு செய்வதாக தேர்தல் அதிகாரி எம்.சக்கரவர்த்தி அறிவித்துள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை (ஏப்.12) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் 2026லும் திராவிட மாடல் ஆட்சிதான்: முதல்வர் ஸ்டாலின் உறுதி!!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:56:05 PM (IST)

தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:24:38 PM (IST)

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி : ஆட்சியர் தகவல்!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:18:54 AM (IST)

திருப்பதிக்கு நிகராக திருச்செந்தூர் கோவில் வடிவமைப்பு : தமிழக முதல்வருக்கு சேகர்பாபு புகழாரம்
வெள்ளி 18, ஏப்ரல் 2025 8:58:07 AM (IST)

அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 17, ஏப்ரல் 2025 5:50:13 PM (IST)

காவல்துறைக்கு துப்பாக்கி கொடுப்பது என்கவுன்ட்டர் செய்வதற்கு அல்ல: உயர்நீதிமன்றம் கண்டனம்
வியாழன் 17, ஏப்ரல் 2025 5:41:53 PM (IST)
