» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாஜகவுடன் கூட்டணி மட்டுமே; கூட்டணி ஆட்சி கிடையாது: எடப்பாடி பழனிசாமி பேட்டி
புதன் 16, ஏப்ரல் 2025 12:31:15 PM (IST)
"நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் திமுகவுக்கு ஏன் எரிச்சல்? திமுகவுக்கு பயம்" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதிமுகவினர் வெளிநடப்பு செய்த நிலையில், அக்கட்சி எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம் மட்டும் அவையின் உள்ளே இருக்கிறார். இந்தநிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: அதிமுக சார்பில் பேரவையில் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம்.
தீர்மானத்திற்கு சபாநாயகர் அனுமதி தரமறுத்ததை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது. பாஜகவுடன் கூட்டணியில் அங்கம் வகிப்போம் என்று கூறினோம். கூட்டணி ஆட்சி என்று கூறவில்லை. டெல்லிக்கு பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி என்றுதான் அமித்ஷா கூறினார். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்று அமித்சாவும் கூறவில்லை. நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் திமுகவுக்கு ஏன் எரிச்சல்? திமுகவுக்கு பயம். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி என்றார்.
தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக இணைந்து போட்டியிடும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சில தினங்கள் முன் சென்னை வந்த அமித் ஷா, பாஜக - அதிமுக கூட்டணியை உறுதிப்படுத்தி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அடுத்து வருகின்ற ஆண்டுகளில் ராக்கெட் வேக வளர்ச்சி நிச்சயம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
வெள்ளி 9, மே 2025 5:41:23 PM (IST)

தனியார் தொழிற்சாலையில் காவலாளி கொலை : தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்
வெள்ளி 9, மே 2025 5:13:33 PM (IST)

போர்ச் சூழலில் எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் : எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
வெள்ளி 9, மே 2025 4:56:05 PM (IST)

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
வெள்ளி 9, மே 2025 4:44:33 PM (IST)

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
வெள்ளி 9, மே 2025 4:00:54 PM (IST)

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்ய சிறப்பு முகாம்: ஆட்சியர்
வெள்ளி 9, மே 2025 3:44:06 PM (IST)

peopleApr 16, 2025 - 07:42:28 PM | Posted IP 162.1*****