» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நடிகர் பாபி சிம்ஹா கார் மோதி விபத்து: 3 பேர் படுகாயம்; டிரைவர் கைது, கார் பறிமுதல்!

சனி 19, ஏப்ரல் 2025 11:39:44 AM (IST)



சென்னையில் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் மோதிய விபத்தில் 3பேர் காயம் அடைந்துள்ளனர். 6க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் பாபி சிம்ஹா. பீட்சா, சூது கவ்வும், ஜிகர்தண்டா, இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரிடம் டிரைவராக பணியாற்றி வந்தவர் புஷ்பராஜ். இவர் பாபி சிம்ஹாவின் தந்தையை வீட்டில் விட்டுவிட்டு கிண்டி கத்திபாரா அருகே வந்துகொண்டிருந்தார்.

அப்போது திடீரென கார் விபத்துக்குள்ளானது. இதில், 3 பேர் படுகாயமடைந்தனர். மேலும் 6க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. இதனையடுத்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, புஷ்பராஜிடன் மேற்கொண்ட விசாரணையில் அவர் மதுபோதையில் வாகனம் இயக்கியது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் டிரைவர் புஷ்பராஜை கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory