» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொறியியல் படிப்புகளுக்கு மே 7 முதல் விண்ணப்பிக்கலாம்!

திங்கள் 5, மே 2025 3:14:08 PM (IST)

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு மே 7 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் சேர மே 7 ஆம் தேதி முதல் https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பொறியியல் விண்ணப்பப் பதிவு மே 7 தொடங்கி ஜூன் 6 வரை நடைபெற உள்ளது. அதன்பின்னர் கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவினை அமைச்சர் கோவி.செழியன் நாளை(மே 6) தொடங்கிவைக்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory