» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெண் தலை துண்டித்து படுகொலை: பட்டுக்கோட்டை அருகே பயங்கரம்!
செவ்வாய் 6, மே 2025 10:27:35 AM (IST)
பட்டுக்கோட்டை அருகே பெண் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த சரண்யா(35) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருக்கும் திருமணம் ஆகி 15 வயதில் சாமுவேல் என்ற மகனும், 13 வயதில் சரவணன் என்ற மகனுடன் மதுரையில் வசித்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் கடந்த 2021-ல் சண்முகசுந்தரம் இறந்துவிட்டதால், சரண்யா பட்டுக்கோட்டை வட்டம், கழுகபுலிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பாலன்(45), என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் உதயசூரிபுரம் மீன் மார்க்கெட் அருகே வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
பாலனும், சரண்யாவும் உதயசூரியபுரம் கடைத்தெருவில் அய்யனார் டிராவல்ஸ் மற்றும் சரண்யா ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளனர். திங்கள் கிழமை இரவு பாலன் மற்றும் சரண்யாவின் மகன்கள் ஆகியோர் கடையை பூட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் தனது மகன்களை அழைத்துக் கொண்டு சற்று முன்னதாக சென்றுள்ளார்.
அதன் பின்னர் சரண்யா கடையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது சரண்யா வீட்டிற்கு செல்லும் சந்துப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள், சரண்யாவின் கழுத்து மற்றும் தலையின் பின்பக்கம் வெட்டியுள்ளனர். இதில், சரண்யா தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதில் பரிதாபமாக பலியானார்.
இது குறித்து வாட்டாத்திகோட்டை காவல்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரண்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.சரண்யா மதுரையில் வசித்தபோது பாஜ கட்சியில் பொறுப்பில் இருந்துள்ளார். இப்போது பொறுப்பில் எதிலும் இல்லை. என்ன காரணத்தால் அவர் கொலை செய்யப்பட்டார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி வாகனங்கள் சாலையில் இயக்க தகுதியாக உள்ளதா? ஆட்சியர் க.இளம்பகவத் நேரில் ஆய்வு!
செவ்வாய் 6, மே 2025 5:02:01 PM (IST)

பாரதிதாசன் பிறந்தநாள் விழா போட்டிகளில் வென்றவர்களுக்கு சான்றிதழ்: ஆட்சியர் வழங்கினார்
செவ்வாய் 6, மே 2025 4:10:43 PM (IST)

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே-8ல் வெளியீடு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
செவ்வாய் 6, மே 2025 12:06:17 PM (IST)

தற்காப்பு கலை பயிற்சி - ஆராய்ச்சி மையம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
செவ்வாய் 6, மே 2025 11:18:58 AM (IST)

கொடி நாள் நன்கொடை வசூல்: குமரி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுநர் பாராட்டு சான்றிதழ்!
திங்கள் 5, மே 2025 4:37:05 PM (IST)

அதிமுக ஆட்சி மலர்ந்ததும் வணிகர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் : எடப்பாடி பழனிசாமி
திங்கள் 5, மே 2025 3:59:37 PM (IST)
