» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மதுபோதையில் குளத்தில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி மரணம்!
சனி 17, மே 2025 3:44:44 PM (IST)

நாகர்கோவில் அருகே மதுபோதையில் குளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள கோட்டாறு கம்பளம் பகுதியில் மதுரையை சேர்ந்த செல்வராஜ் (30), சாட்டை அடித்துக் கொண்டு தர்மம் எடுத்து வந்தார். இவர் நேற்று மாலை குடிபோதையில் வடிவீஸ்வரம் நீராளி கரை குளத்தில் குளிப்பதற்காக இறங்கிய போது தவறி விழுந்து மரணம் அடைந்துள்ளார்.
குளிக்க சென்றவர் இரவு 7 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை என்பதால் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் நேற்று இரவு வரை தேடுதல் பணி நடந்தது. குளத்தில் போதுமான அளவு வெளிச்சம் இல்லாததால் தேடுதல் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
பின்னர் இன்று காலை மீண்டும் தீயணைப்பு துறையினர் தேடுதல் பணியில் துரிதமாக செயல்பட்டு 15 நிமிடங்களுக்குள் குளத்தில் கிடந்தவரை பிணமாக மீட்டனர். இவருக்கு சாந்தி (28) என்ற மனைவியும் 5 வயது, மற்றும் 9 வயதில் இரண்டு மகன்களும் 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பொங்கல் விழா கோலாகலம்: ஆலயங்களில் சிறப்பு வழிபாடு
வியாழன் 15, ஜனவரி 2026 3:45:54 PM (IST)

பராசக்தி படத்தில் எந்த சர்ச்சையும் இல்லை : சிவகார்த்திகேயன்
புதன் 14, ஜனவரி 2026 5:06:41 PM (IST)

பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்வு: அன்பில் மகேஷ் அறிவிப்பு
புதன் 14, ஜனவரி 2026 5:01:38 PM (IST)

அதிமுக சார்பில் புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர் வரிசைகள் வழங்கும் நிகழ்ச்சி!
புதன் 14, ஜனவரி 2026 12:53:02 PM (IST)

அனைவரது வாழ்விலும் அன்பு, மகிழ்ச்சி, நலம், வளம் பெருகட்டும்: தமிழிசை பொங்கல் வாழ்த்து!
புதன் 14, ஜனவரி 2026 12:16:48 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள் : நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறப்பு!
புதன் 14, ஜனவரி 2026 8:55:08 AM (IST)

