» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தொப்புள்கொடி உறவுகளுக்கு நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக இருப்போம்: விஜய்

ஞாயிறு 18, மே 2025 8:55:51 PM (IST)

உலகெங்கிலும் உள்ள தொப்புள்கொடி உறவுகளுக்கு நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக இருப்போம் என விஜய் தெரிவித்துள்ளார்.

இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாளையொட்டி விஜய் இவ்வாறு பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக விஜய் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று உறுதி ஏற்போம்.

மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகில் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும். மாமக்கள் போற்றுதும்! மாவீரம் போற்றுதும்'' எனப் பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory