» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீதிமன்ற அவமதிப்பு: முன்னாள் ஆட்சியருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - உயர் நீதிமன்றம் உத்தரவு!

சனி 24, மே 2025 12:34:50 PM (IST)

கோவை மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பட்டா அவணம் தொடர்பாக 2023ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்பதைக் காரணம் காட்டி, கோவை முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமார் பாட்டீலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை குறித்த காலத்தில் அமல்படுத்தாதைச் சுட்டிக்காட்டி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், முன்னாள் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாட்டீல் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளாவுக்கும் கோட்டாட்சியர் கோவிந்தனுக்கு தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மூவரின் அபராதத்தை அவர்களது சொந்த ஊதியத்திலிருந்து வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கில், கோவை வடக்கு வட்டாட்சியர் மணிவேலுக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை பிறப்பித்து நீதிபதி வேல்முருகன் உத்தர்விட்டுள்ளார். கோவையைச் சேர்ந்த ஜான் சாண்டி (74) என்பவரது நிலத்தின் பட்டா ஆவணத்தில் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட 2 பேரை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதனை உரிய காலத்தில் நிறைவேற்றாதது குறித்து தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் 3 வட்டாட்சியர்களுக்கும் ஒரு கிராம நிர்வாக அலுவலருக்கும் 1 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருப்போரூர் வட்டாட்சியர் வெங்கட்ராமன், மதுரைக்கரை வட்டாட்சியர் சத்யனுக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனையும், கோவை ஆதிதிராவிடர் நல சிறப்பு வட்டாட்சியர் ஸ்ரீமலதிக்கும், வெள்ளலூர் கிராம நிர்வாக அலுவலருக்கும் தலா ஒரு மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை 1 மாதம் நிறுத்தி வைத்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory