» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாகர்கோவிலில் மெகா வேலைவாய்ப்பு முகாம்: அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு!
சனி 24, மே 2025 3:30:48 PM (IST)

நாகர்கோவிலில் நடந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நேர்காணல் அரங்குகளை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் பார்வையிட்டு, மாணவ மாணவியர்களிடம் கலந்துரையாடினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், நான் முதல்வன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TN Skills), தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மற்றும் அஸ்கார்டியா பவுண்டேஷன் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் இன்று (24.05.2025) மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில் அமைச்சர் த.மனோ தங்கராஜ் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் "கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், நான் முதல்வன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TN Skills), தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் இணைந்து மாதந்தோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வந்தது.
இம்முகாம்களில் அதிகளவு மாணவர்களும், வேலை நாடுநர்களும் கலந்து கொண்டார்கள். எனவே இவர்களுக்காக ஒரு மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மூன்று மாதத்திற்கு மேலாக இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்த பல்வேறு பணிகள் மேற்கொண்டு தற்போது தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் அதாவது நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்
இந்த வேலைவாய்ப்பு முகாமில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 100-க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டிற்குட்பட்ட முன்னணி நிறுவனங்ளும், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த முன்னணி நிறுவனங்களும் கலந்து கொண்டார்கள். நமது மாவட்டத்தில் குறைவான தொழில் நிறுவனங்கள் உள்ளதால் நான்முதல்வன் திட்டத்தின் வாயிலாக இந்த மெகா வேலைவாய்ப்பு முகாம் நடத்துவதன் வாயிலாக நமது மாவட்டத்திற்கு உட்பட்ட இளைஞர்கள் வெளி மாவட்டங்களில் உள்ள முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பு உருவாகும். கல்லூரி படிப்பு படிக்கும்போதே கேம்பஸ் இன்டர்வியூ வாயிலாக முன்னணி நிறுவனங்களில் பணியில் சேர்வார்கள்.
இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 6500 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதியை பொறுத்து 18 வயது முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டார்கள். முகாமில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் அனைத்தும் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனங்களாகும். இம்முகாமில் தேர்வு செய்யப்படும் வேலை நாடுநர்களுக்கு உடனடி பணி ஆணை வழங்கப்பட்டு வருகிறது.
மெகா வேலைவாய்ப்பு முகாமில் குடிநீர், மாலை உணவு, பேருந்து வசதி, வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் கல்லூரிக்கு வருவதற்கான தகவல் பலகையினை நெடுஞ்சாலை பகுதிகளில் வைப்பது, பணி ஆணை பெற்றவர்களுக்கு தகுதியான முறையில் உடனடியாக ஆணை வழங்குவது உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் எந்த ஒரு தொய்வுமின்றி மேற்கொண்டு சிறப்பாக மெகா வேலைவாய்ப்பு முகாமினை வெற்றி அடைய செய்ய வேண்டுமென அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் முழு வீள்ச்சியில் பணியாற்றி வருகிறார்கள்.
இம்முகாமில் கலந்து கொள்ளும் அனைவரும் தங்களுக்கு தகுதியான வேலைகளை தேர்வு செய்து பணி ஆணை பெற்று வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். முன்னதாக வேலைவாய்ப்பு முகாமினை பார்வையிட்டு, மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.
முகாமில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவர் என்.சுரேஷ் ராஜன், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.எஸ்.காளீஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் கு.சுகிதா (பொது), ஜெங்கின் பிரபாகர் (வேளாண்மை), கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் சிவகாமி, துணை இயக்குநர்கள் ஷீலா ஜாண் (தோட்டக்கலை), கீதா (வேளாண் விற்பனை மற்றும் வணிகம்), உதவி இயக்குநர்கள் ராமலிங்கம் (பேரூராட்சிகள்), லெட்சுமிகாந்தன் (திறன் மேம்பாடு), மாவட்ட வழங்கல் அலுவலர் புஷ்பா தேவி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆறுமுக வெங்கடேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தூர் ராஜன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தினேஷ், மாவட்ட சமூக நல அலுவலர் விஜய மீனா, நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, உசூர் மேலாளர் சுப்பிரமணியம், வட்டாட்சியர்கள் முருகன் (அகஸ்தீஸ்வரம்), கோலப்பன் (தோவாளை), மாமன்ற உறுப்பினர் செல்வி.கௌசிகா, பூதலிங்கம், துறை அலுவலர்கள், பேராசிரியர்கள், நிறுவன பிரதிநிதிகள், பெற்றோர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மத்திய அரசு நிதியை விடுவிக்க வேண்டும் : வைகோ வலியுறுத்தல்
சனி 24, மே 2025 5:03:15 PM (IST)

சட்டப் பல்கலைக்கழகம் மாணவிக்கு ரூ.3 இலட்சம் வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
சனி 24, மே 2025 3:12:50 PM (IST)

தூத்துக்குடியில் குழாய் மூலம் வீடு, வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம்!
சனி 24, மே 2025 12:46:02 PM (IST)

நீதிமன்ற அவமதிப்பு: முன்னாள் ஆட்சியருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - உயர் நீதிமன்றம் உத்தரவு!
சனி 24, மே 2025 12:34:50 PM (IST)

வீட்டு வரி, தண்ணீர் வரிகளை திமுக அரசு திரும்பப் பெற வேண்டும் : எடப்பாடி பழனிசாமி
சனி 24, மே 2025 12:23:46 PM (IST)

அணு ஆயுதத்தை காட்டி, இந்தியாவை அச்சுறுத்த முடியாது: மாஸ்கோவில் கனிமொழி எம்.பி., பேச்சு!
சனி 24, மே 2025 11:40:46 AM (IST)
