» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
என்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை : அன்புமணி பேட்டி
வெள்ளி 30, மே 2025 5:29:02 PM (IST)
என்னை நீக்க பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி கூறியிருக்கிறார்.

என்னுடைய அணியை வீழ்த்த சுழ்ச்சி நடக்கிறது. அபாண்டமான பழிகளை சுமந்தவன் நான், வாழ்க்கையில் எண்ணற்ற பழிகளை சுமந்தவன், அவமானங்களை சந்தித்தவன். எவ்வளவோ அவமானங்களை சந்தித்துவிட்டேன், பாமகவில் நிலவும் குழப்பங்கள் தற்காலிகமானவை. தற்போதைய குழப்பங்கள் சரி செய்யப்படும். அதை நான் சரி செய்துவிடுவேன் என்றும் கூறினார். பாமக உள்ள கூட்டணியே வெற்றிபெறும். அதுபோல வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக இடம்பெற்றுள்ள கூட்டணியே வெற்றி பெறும் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், புதுச்சேரியில் நடைபெற்ற கட்சியின் புத்தாண்டு பொதுக் குழுக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் மகள்வழிப் பேரனான முகுந்தன் பரசுராமன், பாமக இளைஞர் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த அறிவிப்பை ராமதாஸ் வெளியிட்டபோது, மேடையில் இருந்த அன்புமணி ராமதாஸ் அதற்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இளைஞர் சங்கத் தலைவராக முகுந்தன் நியமிக்கப்பட்டது முதல் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே அரசியல் ரீதியாக கருத்து மோதல்கள் ஏற்பட்டன.அதன் ஒருபகுதியாக, அண்மையில், அன்புமணியை கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கி செயல் தலைவராக அறிவித்த ராமதாஸ், பாமக தலைவராக தானே செயல்படப்போவதாகவும் அறிவித்தார். அதன் பிறகு ராமதாஸ் நடத்திய கூட்டங்களை அன்புமணி தொடர்ந்து புறக்கணித்து வந்தார். இந்தநிலையில், நேற்று தைலாபுரத்தில், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ராமதாஸ் செய்தியாளர்கள் முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை, தூத்துக்குடி உட்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
சனி 31, மே 2025 5:46:53 PM (IST)

தமிழகத்தில் அரசு துறைகளில் பணியாற்றிய 8,144 பேர் இன்று ஒரே நாளில் பணி ஓய்வு!
சனி 31, மே 2025 5:24:36 PM (IST)

அன்புமணி- ராமதாஸ் பிரிவினைக்கு நான் காரணமா? பாமக உட்கட்சி குழப்பதால் ஜி.கே.மணி வேதனை
சனி 31, மே 2025 5:20:29 PM (IST)

வள்ளுவரை சனாதன துறவி என்பதா? ஆளுநர் பேச்சுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கண்டனம்!
சனி 31, மே 2025 5:15:55 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் வளர்ச்சித் திட்டங்கள் தீவிரம் : ஆணையத் தலைவர் பெருமிதம்
சனி 31, மே 2025 4:51:36 PM (IST)

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஆட்சியர் ஆய்வு!
சனி 31, மே 2025 4:16:14 PM (IST)
