» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் உயர்நீதிமன்றம் அனுமதி!!

புதன் 4, ஜூன் 2025 5:11:17 PM (IST)

தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கி உள்ளது. 

திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அந்தந்த காவல்துறை அனுமதி வழங்குவது வழக்கம். ஆனால் சட்டம் – ஒழுங்கு பிரச்சனைகளை காரணம் காட்டி காவல்துறையினர் அனுமதி மறுத்ததின் காரணமாக, 7க்கும் மேற்பட்ட மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் நீதிபதி புகழேந்தி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், கடந்த பல ஆண்டுகளாக கோவில் திருவிழாவின் போது ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது சட்டம் – ஒழுங்கு பிரச்னைகளைகாட்டி காவல் துறையினர் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க மறுக்கிறார்கள். அதனை தொடர்ந்து நடத்த அனுமதி வழங்க வேண்டும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "சமூக ஊடக காலம் இது. இந்த சூழலில், ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்து உள்ளீர்கள். இந்த ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அதிக பணம் செலவு செய்யப்படுகிறது. எனவே, ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்படுகிறது. 

ஆடல், பாடல் நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளின் செயலாளரிடம், ரூ.25 ஆயிரம் மனுதாரர் செலுத்த வேண்டும். இந்த 25 ஆயிரம் கொண்டு, அந்த கிராமத்தில் நீர் நிலைகளை தூர் வார வேண்டும். இதனால், கிராமம் செழிப்பாக இருக்கும்” என உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory