» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கன்னியாகுமரியில் சுற்றுலா படகு கட்டணம் உயர்வு: இன்று முதல் அமல்!

வியாழன் 5, ஜூன் 2025 10:35:47 AM (IST)

கன்னியாகுமரியில் சுற்றுலா படகு கட்டணம் உயர்வு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, சாதாரண கட்டணம் ரூ.75-ல் இருந்து ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. 

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள பறைகளில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை போன்றவை அமைந்துள்ளன. இவற்றை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தினசரி ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் படகு பயணம் மேற்கொள்கின்றனர். 

கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. படகு போக்குவரத்து தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை தொடர்ச்சியாக நடைபெறும். இந்நிலையில் படகு, கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சாதாரண கட்டணம் ரூ.75-ல் இருந்து ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. 

மாணவர்களுக்கான சலுகைக் கட்டணம் ரூ.30-ல் இருந்து ரூ.40 ஆக உயர்த்தப்படுகிறது. அதேவேளையில், சிறப்பு கட்டணம் எவ்வித மாற்றமும் இன்றி ரூ.300 ஆக நீடிக்கிறது. கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தினர் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory