» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வைகாசி விசாகத் திருவிழா: நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு பக்தர்கள் பாதயாத்திரை துவக்கம்!
வெள்ளி 6, ஜூன் 2025 3:17:05 PM (IST)

வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.
நாகர்கோவில் ஆசாரிமார் வடக்கு தெரு இசக்கிமுத்து சுவாமிகளால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி வைகாசி விசாகம் மற்றும் மாசி மகம் முருக பக்தர்கள் பாதயாத்திரை குழுவின் 38 ஆம் ஆண்டு பாதயாத்திரை நிகழ்ச்சி நாகர்கோவிலில் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் நாகர்கோவில் முதல் திருச்செந்தூர் வரை பாதயாத்திரையாக செல்கின்றனர்.
இந்த பாதயாத்திரை 8ம்தேதி திருச்செந்தூர் சென்றடைகிறது. பின்பு திருச்செந்தூர் கடலில் புனித நீராடி காவடி கட்டி எடுத்துச் செல்லப்பட்ட விபூதி பன்னீர் தேன் போன்ற பொருட்களை செந்தில் ஆண்டவருக்கு செலுத்தி வழிபடுகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் மாநில பகுஜன் சமாஜ்: புதிய அரசியல் கட்சி தொடங்கினார் ஆம்ஸ்ட்ராங் மனைவி..!!
ஞாயிறு 6, ஜூலை 2025 11:11:26 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய பேருந்து சேவை : அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
ஞாயிறு 6, ஜூலை 2025 10:46:20 AM (IST)

தூத்துக்குடியில் மீன்கள் வரத்து அதிகரிப்பு, விலை குறைந்தது: பொதுமக்கள் மகிழ்ச்சி!!
ஞாயிறு 6, ஜூலை 2025 10:00:11 AM (IST)

திருச்செந்தூர் கோவில் பாதுகாப்பில் 360 டிகிரி கேமரா ஜிபிஎஸ் வாகனங்கள்: ஏடிஜிபி துவக்கி வைத்தார்
சனி 5, ஜூலை 2025 8:00:37 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகல்!
சனி 5, ஜூலை 2025 5:15:49 PM (IST)

விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ. 5 இலட்சம் வரை கடன் உதவி : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்
சனி 5, ஜூலை 2025 4:39:34 PM (IST)
