» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகல்!

சனி 5, ஜூலை 2025 5:15:49 PM (IST)



தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு ஆலோசகர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.

பாஜக, திமுக, திரிணமூல் உள்ளிட்ட பல கட்சிகளுக்கு பல்வேறு தேர்தல்களில் வியூகம்  வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர் பிகாரில் 'ஜன் சுராஜ்' என தனிக்கட்சியைத் தொடங்கி செயல்பட்டு வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டார். தவெகவின் சிறப்பு ஆலோசகராக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் பிகார் மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் வரவுள்ளதால் தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு ஆலோசகர் பொறுப்பில் இருந்து சில காலம் விலகுவதாக பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். பிகார் பேரவைத் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபடவுள்ளதாகவும் தேர்தல் முடிந்தபின்னர் அதாவது நவம்பருக்குப் பிறகே தவெக ஆலோசகராக மீண்டும் செயல்படுவது பற்றி முடிவெடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

ஆம்Jul 6, 2025 - 09:16:47 PM | Posted IP 172.7*****

புதிதாக கட்சி ஆரம்பித்தவர்களுக்கு அப்படிதான் இருக்கும்

ஆலோசகர்Jul 6, 2025 - 09:54:10 AM | Posted IP 162.1*****

விஜய் மக்கள் / அரசியல் பற்றி தெரியாத ஒரு நடிகர். பிரசாந்த் கிஷோர் அதனால் ஓடி விட்டார்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory