» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
சனி 5, ஜூலை 2025 11:43:12 AM (IST)
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராகவும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளன. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ளது.இதனால் அதிமுக தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. அதன்படி எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். வரும் 7 ம் தேதி முதல் அவர் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்கிறார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கான பாதுகாப்பு திடீரென்று அதிகரிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமிக்கு தற்போது ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. தற்போது அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி எடப்பாடி பழனிச்சாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இசட் பிளஸ் என்பது நம் நாட்டின் 2வது உயர்ரக பாதுகாப்பாகும். பிரதமர் மோடிக்கு எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. மோடிக்கு அடுத்தப்படியாக உள்ள உயர்ரக பாதுகாப்பு தான் இசட் பிளஸ் பாதுகாப்பாகும். இந்த இசட் பிளஸ் பாதுகாப்பில் 12 கமாண்டோக்கள், 52 காவலர்கள் வரை இடம்பெறுவார்கள். இவர்கள் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாதுகாப்பு வழங்க உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீதிபதி தீர்ப்பிற்கு எதிராக கோஷம் எழுப்பிய தி.மு.க எம்.எல்.ஏ மகன்: விமான நிலையத்தில் பரபரப்பு
திங்கள் 8, டிசம்பர் 2025 11:25:39 AM (IST)

குமரி மாவட்டத்தில் 40 புதிய மகளிர் விடியல் பேருந்துகள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
திங்கள் 8, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

குமரி பேராயர் கிறிஸ்டோபர் விஜயன் பதவியேற்பு விழா : பிரதம பேராயர் ரூபன் மார்க் பங்கேற்பு
திங்கள் 8, டிசம்பர் 2025 10:37:57 AM (IST)

நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனத்தில் ரூ. 888 கோடி ஊழல் : அன்புமணி குற்றச்சாட்டு!
திங்கள் 8, டிசம்பர் 2025 10:25:22 AM (IST)

சென்னையில் இன்று ஒரே நாளில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து: பயணிகள் பாதிப்பு!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 10:14:58 AM (IST)

மெழுவர்த்தி தீபத்தால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)


