» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் கோவில் பாதுகாப்பில் 360 டிகிரி கேமரா ஜிபிஎஸ் வாகனங்கள்: ஏடிஜிபி துவக்கி வைத்தார்

சனி 5, ஜூலை 2025 8:00:37 PM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பு கருதி 360 டிகிரி கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட காவல்துறை வாகனங்களை தமிழ்நாடு காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற 07.07.2025 அன்று வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜிபிஎஸ் கருவி மற்றும் 360 டிகிரி சுழலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட 3 நான்கு சக்கர வாகனங்கள், ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட 10 இருசக்கர வாகனங்கள் மற்றும் ட்ரோன் கேமராக்கள் ஆகியவற்றை இன்று (05.07.2025) காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் முன்பாக கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அதன்படி இந்த திருவிழாவை முன்னிட்டு 24 மணிநேரமும் சுழற்சி முறையில் இயங்கும் மேற்படி காவல்துறை ரோந்து வாகனங்கள் ஜிபிஎஸ் கருவி மூலம் நேரடியாக காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கபட்டு ஏதேனும் அசாம்பிதம் நடந்தால் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று குற்ற சம்பவங்களை தடுக்கவும், 360 டிகிரி சுழலும் சிசிடிவி கேமரா மூலம் வாகனத்தில் இருந்து சந்தேகம்படும்படியாக உள்ள நபர்களை நேரடியாக கண்காணித்தும், டிரோன் கேமராக்கள் மூலமும் அனைத்து இடங்களையும் கண்காணித்தும் பக்தர்கள் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேற்படி ரோந்து வாகன துவக்க விழாவின் போது திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பொறுப்பு சந்தோஷ் ஹடிமணி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடி நகர கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன், திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் உட்பட காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory