» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் மீன்கள் வரத்து அதிகரிப்பு, விலை குறைந்தது: பொதுமக்கள் மகிழ்ச்சி!!

ஞாயிறு 6, ஜூலை 2025 10:00:11 AM (IST)

தூத்துக்குடியில் மீன்களின் வரத்து அதிகரித்து இருந்ததால் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன் ஏலக்கூடத்தில் மீன்கள் விலை குறைந்தது. 

தூத்துக்குடியில் மீன்பிடி தடை காலத்தை முன்னிட்டு விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருந்தனர். இதன் காரணமாக தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் நாளுக்கு நாள் மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. ஆனால் தடை காலம் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதால் மீன்களில் விலை குறைய ஆரம்பித்தது.

இந்த நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று கரைக்கு திரும்பினர். ஆழ்கடலுக்கு சென்று வந்த இந்த நாட்டுப்படகு மீனவர்களுக்கு, மீன்பாடு நன்றாக இருந்ததால் நேற்று திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மீன்களின் வரத்து அதிகரித்து இருந்ததால் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன் ஏலக்கூடத்தில் மீன்கள் விலை குறைந்து காணப்பட்டது.

அதன்படி விளைமீன், ஊளி, பாறை ஆகிய மீன்கள் கிலோ ரூ.250 முதல் ரூ.350 வரையும், குறுவலை மீன் ரூ.350 வரையும், தோல்பாறை மீன் ரூ.200 வரையும், வங்கனை மீன் ரூ.100 முதல் ரூ.130 வரையும் விற்பனையானது. வரத்து குறைவின் காரணமாக சீலா மீன் கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது. மீன்களின் விலை குறைந்து காணப்பட்டதால் ஏராளமான பொதுமக்கள் மீன்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory