» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ் மாநில பகுஜன் சமாஜ்: புதிய அரசியல் கட்சி தொடங்கினார் ஆம்ஸ்ட்ராங் மனைவி..!!
ஞாயிறு 6, ஜூலை 2025 11:11:26 AM (IST)

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மனைவி ‘தமிழ் மாநில பகுஜன் சமாஜ்’ என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவரது முதலாம் ஆண்டு நினைவஞ்சலி ‘‘நினைவேந்தல் நிகழ்ச்சியாக’’ திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பொத்தூரில் நேற்று நடைபெற்றது. முன்னதாக ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் அவரது மனைவி பொற்கொடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து பொற்கொடி தலைமையில் காலை 9 மணிக்கு பொத்தூர் பகுதியில் உள்ள வள்ளலார் கோவிலில் இருந்து நினைவிடம் வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் நினைவிடத்தில் சுமார் 9 அடி உயரத்தில் நிறுவப்பட்ட ஆம்ஸ்ட்ராங் முழு உருவ சிலையை அவரது மனைவி பொற்கொடி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தாயார் கமலா கவாய் ஆகியோர் திறந்துவைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி ‘‘தமிழ் மாநில பகுஜன் சமாஜ்’’ என்ற புதிய கட்சியை தொடங்கி அதன் கொடியை அறிமுகப்படுத்தினார். நீல நிற கொடியில், தும்பிக்கையில் பேனாவுடன் யானை இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்துக்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஜான் பாண்டியன், தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி, தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன், திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய பேருந்து சேவை : அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
ஞாயிறு 6, ஜூலை 2025 10:46:20 AM (IST)

தூத்துக்குடியில் மீன்கள் வரத்து அதிகரிப்பு, விலை குறைந்தது: பொதுமக்கள் மகிழ்ச்சி!!
ஞாயிறு 6, ஜூலை 2025 10:00:11 AM (IST)

திருச்செந்தூர் கோவில் பாதுகாப்பில் 360 டிகிரி கேமரா ஜிபிஎஸ் வாகனங்கள்: ஏடிஜிபி துவக்கி வைத்தார்
சனி 5, ஜூலை 2025 8:00:37 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகல்!
சனி 5, ஜூலை 2025 5:15:49 PM (IST)

விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ. 5 இலட்சம் வரை கடன் உதவி : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்
சனி 5, ஜூலை 2025 4:39:34 PM (IST)

எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
சனி 5, ஜூலை 2025 11:43:12 AM (IST)
