» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
வியாழன் 5, ஜூன் 2025 4:56:29 PM (IST)
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வரும் 7 நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் வரும் 7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 10-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 11-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இசைஞானி இளையராஜாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததை பாக்கியம்: அண்ணாமலை நெகிழ்ச்சி!
சனி 7, ஜூன் 2025 12:25:18 PM (IST)

மாணவர்களின் அறுவை சிகிச்சை பயிற்சிக்கு வெண் பன்றிகள் பயன்படுத்த அனுமதி!
சனி 7, ஜூன் 2025 11:56:48 AM (IST)

சமூக வலைதளங்களில் போலீஸ் சீருடையுடன் புகைப்படம் வெளியிட கூடாது : டிஜிபி உத்தரவு!
சனி 7, ஜூன் 2025 10:58:53 AM (IST)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் அழைப்பு
சனி 7, ஜூன் 2025 9:05:57 AM (IST)

பொறியியல் படிக்க முடியாதால் விரக்தி: மாணவி விஷம் குடித்து தற்கொலை!
சனி 7, ஜூன் 2025 8:58:20 AM (IST)

தேர்தல் தகராறு வழக்கு : தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆஜா்
சனி 7, ஜூன் 2025 8:33:40 AM (IST)
