» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சமூக வலைதளங்களில் போலீஸ் சீருடையுடன் புகைப்படம் வெளியிட கூடாது : டிஜிபி உத்தரவு!

சனி 7, ஜூன் 2025 10:58:53 AM (IST)

சமூக வலைதளங்களில் காவல்துறை அதிகாரிகள் தங்களது சீருடையுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து டி.ஜி.பி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதற்கு மேல் பதவியில் இருக்கும் உயர் போலீஸ் அதிகாரிகள் அலுவல் சம்பந்தப்பட்ட விவகாரங்கள், முக்கியமான காவல்துறை பணிகள் தொடர்பாக சீருடையுடன் இருக்கும் புகைப்படங்களை தங்களது தனிப்பட்ட சமூகவலைதள பக்கங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும்.

மேலும், போலீஸ் அதிகாரிகள் தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் சீருடையுடன் கலந்து கொள்வதாகவும் அப்போது பரபரப்பான அதிகாரபூர்வ தகவலை தெரிவிப்பதாகவும், காவல்துறை தலைமை அலுவலகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. யூடியூப் நேர்காணலின்போது போலீஸ் அதிகாரிகள் வழக்குகள் பற்றிய ரகசிய தகவல்களை எக்காரணத்தை கொண்டும் பகிரவேண்டாம்.

அகில இந்திய பணிகளின் நடத்தை விதிகளின்படி, இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. தனிப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் யூடியூப் சேனலில் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்து அரசிடம் தகவல் தெரிவித்து உரிய அனுமதி பெறவேண்டும். தேவைப்பட்டால் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பேசக்கூடிய அனைத்து தகவல்களையும் தங்களது உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய அனுமதி பெறவேண்டும்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்றுதான் பேட்டி அளிக்க வேண்டும். இதுபோன்ற நன்நடத்தை விதிகளை மீறி செயல்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து அதிகாரிகளும் கண்டிப்பாக மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory