» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஓரணியில் தமிழ்நாடு என மக்களை திமுகவில் இணைத்திட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சனி 7, ஜூன் 2025 4:35:01 PM (IST)
ஓரணியில் தமிழ்நாடு என மக்களை திமுகவில் இணைத்திட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார்.

ஓரணியில் தமிழ்நாடு” புதிய உறுப்பினர் சேர்க்கை விரைந்து செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடந்தது. கூட்டத்தில் திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது. 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்களை வழங்கினார்.
பின்னர் அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறுகையில், தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்படவும் – நமது திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தொடர்ந்து மக்களுக்குச் சென்று சேரவும், மக்களை ஓரணியில் தமிழ்நாடு என மக்களை இணைத்திட, சொல்லாற்றல் – செயலாற்றல் மிக்க செயல்வீரர்களான மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் பங்கேற்க மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளுடன் நடந்தேறியது இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்! களம்2026 தேர்தல் பரப்புரையை இப்போதே தொடங்கும் விதமாக மக்களைச் சந்திக்கப் புறப்படும் கழகத் தோழர்களின் ஒவ்வொரு நகர்வும் வெற்றிபெறத் தலைமைத் தொண்டனாக வாழ்த்துகிறேன்! இவ்வாறு தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏழைகளின் மருத்துவர்: பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை காலமானார்!
சனி 7, ஜூன் 2025 5:48:44 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூலை 7ம் தேதி உள்ளூர் விடுமுறை : இந்து முன்னணி கோரிக்கை!
சனி 7, ஜூன் 2025 4:06:44 PM (IST)

இசைஞானி இளையராஜாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததை பாக்கியம்: அண்ணாமலை நெகிழ்ச்சி!
சனி 7, ஜூன் 2025 12:25:18 PM (IST)

மாணவர்களின் அறுவை சிகிச்சை பயிற்சிக்கு வெண் பன்றிகள் பயன்படுத்த அனுமதி!
சனி 7, ஜூன் 2025 11:56:48 AM (IST)

சமூக வலைதளங்களில் போலீஸ் சீருடையுடன் புகைப்படம் வெளியிட கூடாது : டிஜிபி உத்தரவு!
சனி 7, ஜூன் 2025 10:58:53 AM (IST)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் அழைப்பு
சனி 7, ஜூன் 2025 9:05:57 AM (IST)
