» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருமண மண்டபத்தில் 26 பவுன் நகை, ரூ.3 லட்சம் பணம் கொள்ளை: தந்தை, மகன் கைது!
செவ்வாய் 10, ஜூன் 2025 5:08:12 PM (IST)
ராசிபுரம் அருகே திருமண மண்டபத்தில் புகுந்து 26.5 பவுன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்ற தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், ராசிபுரம் அரசு போக்குவரத்து கழக டிப்போ அருகே போலீசார் நேற்று வாகன தணிக்கை செய்தபோது, பைக்கில் சந்தேகத்தின்பேரில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்கு முரணாக பதிலளித்ததால் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடியாக விசாரித்தனர். அவர்கள் கரூர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் (55), அவரது மகன் ஹரிகிருஷ்ணன் என்பதும், ஊர் எல்லையில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளுக்கு, உறவினர்கள்போல் சென்று முகூர்த்த நேரத்தில் மணமகன் மற்றும் மணமகள் அறைகளில் நுழைந்து நகை, பணம், விலை உயர்ந்த ஆடைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து வந்துள்ளனர்.
இவர்கள் ராசிபுரத்தில் நடந்த திருமணத்திலும் 26.5 பவுன் நகைகள், ரூ.3 லட்சம் பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக பழநியில் மொட்டை அடித்து கொண்டு வந்து, வழக்கம்போல் நடமாடி வந்துள்ளனர். இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இதேபோன்று திண்டுக்கல், ஈரோடு மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்களிலும் இவர்கள் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா ஆய்வு
வெள்ளி 20, ஜூன் 2025 5:37:39 PM (IST)

பாலியல் வழக்குகள்: பெண்கள், குழந்தைகளின் பெயர், அடையாளத்தை வெளியிடக்கூடாது!
வெள்ளி 20, ஜூன் 2025 5:01:49 PM (IST)

தொழில்நுட்பக் கோளாறு: அவசரமாக தரையிறங்கிய விமானம்.. 8 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!
வெள்ளி 20, ஜூன் 2025 4:26:26 PM (IST)

தயாநிதி மாறனின் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை: சன் டி.வி. நெட்வொர்க் விளக்கம்
வெள்ளி 20, ஜூன் 2025 4:12:32 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய கோரிக்கை!
வெள்ளி 20, ஜூன் 2025 3:21:15 PM (IST)

ரேஷன் கடைகளில் இனி ஒருமுறை கைவிரல் ரேகை பதிவு வைத்தால் போதும்: தமிழக அரசு
வெள்ளி 20, ஜூன் 2025 11:38:49 AM (IST)
